Tuesday, February 15, 2005

சிந்தித்து விடை கூறுங்கள்!

1. X என்பவருக்கு ஒரு பணியை முடிக்க 3 நாட்களும், Y என்பவருக்கு, அதே பணியை முடிக்க 6 நாட்களும் தேவைப்படுகின்றன. X, அப்பணியில், 2 தினங்கள் தனியாக ஈடுபட்ட பின், Y அவருடன் இணைந்து செயல்படத் தொடங்கினால், மீதி உள்ள பணியை முடிக்க எத்தனை நாட்களாகும் (X-ம் Y-ம் சேர்ந்து பணியாற்றும்போது, Y-இன் ஆற்றல் 20% கூடுகிறது என்றும், X-இன் ஆற்றல் 10% குறைகிறது என்றும் வைத்துக் கொள்ளும் பட்சத்தில்) ?

2. ஓர் அறையில் 3 விளக்குகளும், மற்றொரு அறையில் 3 சுவிட்சுகளும் பொருத்தப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு சுவிட்சும் ஒரு விளக்குடன் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது. ஓர் அறையிலிருந்து மற்ற அறையின் உள்ளே பார்க்க இயலாது. எந்த சுவிட்ச் எந்த விளக்குடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதை எப்படி கண்டறிவீர்கள் என்பதே உங்களிடம் கேட்கப்படும் கேள்வி ?

(இதற்கான விடையை முன்பே அறிந்தவர்கள், தயவு செய்து அடக்கி வாசியுங்கள்! மற்றவரும் சற்று யோசிக்கட்டுமே!!!)

விளக்குகள் இருக்கும் அறைக்கு நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் செல்லலாம். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செலவழிக்கலாம், எதையும் சேதப்படுத்தாமல்! அடுத்து, நீங்கள் சுவிட்சுகள் உள்ள அறைக்கு சென்றவுடன், சுவிட்சுகளை எத்தனை முறை வேண்டுமானாலும் சேதப்படுத்தாமல் இயக்கலாம், அவ்வறையில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செலவழிக்கலாம். அவ்வறையை விட்டு வெளியேறியவுடன், மறுபடியும் நுழைய அனுமதி இல்லை!

அடுத்து, உடனேயோ அல்லது சற்று நேரங்கழித்தோ விளக்குகள் இருக்கும் அறைக்கு நீங்கள் செல்லலாம். ஆனால், அங்கு சென்றவுடன் இப்புதிருக்கான விடையைக் கூற வேண்டும்!!!
விளக்குகள் இருக்கும் அறைக்குள் செல்லாமலேயும் நீங்கள் விடை கூறலாம்!!! அப்படிக் கூறினால், நீங்கள் மேதாவி என்று தாராளமாக ஒப்புக் கொள்ளலாம்!!!

3. பொதுவாக, என்ன காரணத்தால் வட்ட வடிவ கழிவுக்குழி மூடிகள் (MANHOLES) சதுர வடிவத்தில் இருப்பவைகளை விட அதிக உபயோகத்தில் உள்ளன ?

6 மறுமொழிகள்:

dondu(#11168674346665545885) said...

சதுர மூடிகள் அவற்றை டையாக்னலாகப் பிடித்தால் ஓட்டைக்குள் விழுந்து விழுந்து விடும். வட்ட மூடிகள் அவ்வாறு விழாது.
அன்புடன்,
டோண்டு ராகவன்

வசந்தன்(Vasanthan) said...

ஆளியுள்ள அறையிலிருந்து தானே மற்ற அறையைப் பார்க்க முடியாது. ஓர் ஆளியைப் போட்டுவிட்டு ஓடிப்போய் பார்த்துவிட்டு வரலாம். இப்படி 3 ஆளிகளுக்கும் செய்து கண்டறியலாம்.

யோசிப்பவர் said...

2. இரண்டு ஸ்விட்சுகளையும் ஆன் செய்யுங்கள். இரன்டு நிமிடம் கழித்து ஒரு ஸ்விட்சை ஆஃப் செய்து விடுங்கள். இப்பொழுது அறைக்குள் நுழையுங்கள். ஒரு விளக்கு எரிந்து கொண்டிருக்கும். அது ஆன் ஸ்டேட்டில் இருக்கும் ஸ்விட்ச்சுடன் இணைக்கப்பட்டது. மற்ற இரு விளக்குகளையும் தொட்டுப் பாருங்கள். சூடாக இருக்கும் விளக்கு, ஆஃப் ஸ்டேட்டில் இருக்கும் ஸ்விட்ச்சுடன் இணைக்கப்பட்டது. இன்னொன்று எதனுடனும் இணைக்கப்படாதது.

Kangs(கங்கா) - Kangeyan Passoubady said...

பாலா, உங்களுடைய மூன்றாவது கேள்விக்கு யோசிப்பவர் முன்பே சரியான விடையைக் கூறிவிட்டதால், இது போன்ற பல கேள்விகளுக்கு (Lateral thinking Puzzles) என்பர். மேலும் பல கேள்விகளை எதிர் பார்க்கிறேன். எழுதுங்கள்.

Chandravathanaa said...

1 - பாலா ஒரு நாள்தான். அன்றே அந்த வேலை முடிந்து விடும்.

வசந்தன்(Vasanthan) said...

உங்களின் அடுத்த பதிவில் (விடைப்பதிவில்) பதிலளிக்க முடியாமையால் இங்கே பதிகிறேன். நான் நக்கலுக்குச் சொல்லேல. அதுவும் பதிலா இருக்கக் கூடிய சாத்தியம் இருக்குத்தானே. (இப்பிடிப் பதில்கள் முந்தி உம்மட பதிவில வரேலயோ? சுயபரிசோதனை தேர்வெல்லாம் என்னவாம்) சரி அத விடும். அதென்ன "சென்றைய"? "முந்தைய" அல்லது "நேற்றைய" அல்லது "சென்ற" பதிவு எண்டுதானே பாவிக்கிறனாங்கள்? உதென்ன சென்றய பதிவு? அண்ணே உங்களிட்டதான் இந்தச்சொல்ல முதல்ல கண்டிருக்கிறன். உந்தச்சொல் பாவனையில இருக்கே? அல்லது தவறாப் போட்டிட்டியளோ? பாவனையில இருந்தாச் சொல்லுங்கோ நானும் பாவிப்பன். புதுசாப் பாவிக்கிறதில ஒரு "இது" இருக்கு. எது எண்டு கேக்காதையுங்கோ.(அறையில் மறுபடி நுழைய அனுமதியில்லை என்ற நிபந்தனையைக் கவனிக்கவில்லை.)

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails